ஐக்கிய அரபுச் சிற்றரசில் இந்தியர்கள் கூண்டில் அடைப்பு

ஐக்கிய அரபுச் சிற்றரசில் இந்தியர்கள் கூண்டில் அடைப்பு

1 mins read

அபுதாபி: ஐக்கிய அரபுச் சிற்றரசில் ஆடவர் ஒருவர் இந்திய காற்பந்து குழுவின் ஆதர வாளர்களைப் பறவைக் கூண்டில் அடைத்து வைத்ததைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளிவந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப் பட்டிருக்கிறார். கடந்த வியாழக் கிழமை ஐக்கிய அரபுச் சிற்றரசில் நடைபெற்ற ஏஎஃப்சி ஆசிய கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இந்தியா, ஐக்கிய அரபுச் சிற்றர சிடம் தோற்றுப்போனது. இந்த ஆடவர், கையில் தடியை வைத்துக்கொண்டு கூண்டில் அடைபட்டிருந்த ஊழியர்களை இந்தியாவுக்குப் பதிலாக ஐக்கிய அரபுச் சிற்றரசை ஆதரிக்கக் கோருவது போல் காணொளி காட்டியது. யாரை ஆதரிக்கிறீர்கள் என்று இந்த ஆடவர், ஊழி யர்களைக் கேட்டபோது தாங்கள் இந்தியாவை ஆதரிப்பதாக ஊழியர்கள் பதில் அளித்தனர். இதற்கு அந்த ஆடவர், இது நல்லதல்ல என்றும் ஐக்கிய அரபுச் சிற்றரசில் இவர்கள் வேலை செய்வதால் இவர்கள் ஐக்கிய அரபுச் சிற்றர சுக்குத்தான் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதற்குச் சரி என்று ஊழியர்கள் கூறிய பின்னர் அவர்கள் விடு விக்கப்பட்டனர். இதனை விளையாட்டாகச் செய்ததாக கைதான ஆடவர் கூறியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.