மும்பை: நவிமும்பையிலுள்ள பன்வெலுக்கு அருகிலுள்ள காலுண்டே பகுதியில் நிலத்தடி சாக்கடையைச் சுத்தம் செய்துகொண்டிருந்த மூவர், அங்கு திடீரென வீசிய நச்சு வாயுவின் காரணமாக உயிரிழந்தனர். அவர்களில் இருவர் சுத்தம் செய்வதற்காக முதலில் பாதாள சாக்கடைக்குள் இறங்கினர். நீண்ட நேரத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் வெளிவராததால் மூன்றாவது ஊழியர் அவர்களைத் தேட முற்பட்டு சாக்கடைக்குள் இறங்கினார். அங்கிருந்து அவரும் வெளிவராததால் சுற்றியுள்ளோர் தீயணைப்புப் படையினரை உதவிக்கு அழைத்தனர். மீட்கப்பட்ட மூவர், மருத்துவமனையில் பின்னர் மாண்டனர். நச்சுவாயுவை சுவாசித்ததால் இவர்கள் இறந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது. சம்பவம் குறித்து போலிசாரின் விசாரணை தொடர்கிறது.
பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்த ஊழியர்கள் நச்சு வாயுவால் பலி
1 mins read

