சென்னை: போலிக் கடப்பிதழ் தயாரித்து விற்பனை செய்து வந்த மோசடிக் கும்பலை சென்னை போலிசார் அதிரடி யாகக் கைது செய்துள்ளனர். சென்னையில் சட்ட விரோதக் கும்பல் ஒன்று போலி கடப்பிதழ் மற்றும் விசாக்கள் தயாரித்து கள்ளச் சந்தையில் விற்று வருவதாகப் போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இக்கும்பலின் நடவடிக்கைகள் குறித்து போலிசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ஜான் பிரபாகர், ஜான்சன் ஆகிய இருவரும், டெல்லியைச் சேர்ந்த சுஜித், மும்பையைச் சேர்ந்த வெங்கடேஷ் நாயக் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து இந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து 13 பேரை சென்னை போலிசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 151 கடப்பிதழ்கள், மடிக்கணினி, ரூ. 18 லட்சம் ரொக்கப்பணம், போலிக் கடப்பிதழ் தயாரிக்க பயன்படுத்திய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர்.
போலி கடப்பிதழ் தயாரித்த 13 பேர் கும்பல் கைது
1 mins read

