18 மாதங்களாக நடுக்கடலில் தவிக்கும் 8 இந்தியர்கள்; அரசிடம் உதவி கோரிக்கை

18 மாதங்களாக நடுக்கடலில் தவிக்கும் 8 இந்தியர்கள்; அரசிடம் உதவி கோரிக்கை

1 mins read

மூன்று தமிழர்கள் உட்பட எட்டு இந்திய மாலுமிகள் ஷார்ஜா நங் கூரத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் கடந்த ஓராண்டுக்கும் மேல் அடைத்துவைக்கப்பட்டுள் ளனர். பயன்பாட்டில் இல்லாத கப்ப லில் சிக்கித் தவிக்கும் அவர்கள், தங்களை மீட்கும்படி இந்திய அரசிடம் உதவி கோரியுள்ளனர். ஐக்கிய அரபு சிற்றரசுகளின் கடற்படைக் காவலர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்தக் கப்பலில் இருக்கும் 10 கப்பல் ஊழியர்களின் கடவுச்சீட்டுகள், பணியாளர் கையேடு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

"கைவிடப்பட்ட அடிமைகளைப் போல இருக்கிறோம். எங்கள் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. கப்பல் நிறுவனம் அனுமதி அளிக்காததால் நாங்கள் வீடு திரும்ப இயலாத நிலையில் இருக்கிறோம். பல மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை," என்று ஐயப்பன் சுவாமிநாதன் எனும் மாலுமி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தொலைபேசி வழியாகத் தெரிவித் துள்ளார். 'எம் வி அஸ்ரக்மொய்யா' என அழைக்கப்படும் அந்தக் கப்பலில் சூடான், டான்ஸேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருவர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.