பொங்கல்: துவங்கியது ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன் குறிச்சியில் நேற்று தொடங்கியது. 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க, அவற்றை அடக்க 450 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். ஜல்லிக்கட்டைக் காண புதுக் கோட்டை மட்டுமல்லாது திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக் கணக்கானோர் தச்சன்குறிச்சியில் திரண்டனர். இதற்கிடையே மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வழக்கம்போல் இந்த ஆண்டும் பொங்கல் திருநாளான இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. மாட்டுப்பொங்கல் தினத்தன்று பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வந்தது. முதன்முறை யாக இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர் களுக்கு காப்பீட்டு திட்டம் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. 'பிரதமர் சுரக்‌ஷா யோஜனா' திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மதிப்புள்ள காப் பீட்டு திட்டத்துக்கு, ஆண்டுக்கு ஒரு முறை 12 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், இரண்டு லட்சம் தொகைக்கு 300 ரூபாய் செலுத்தவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களைப் போல் ஜல்லிக் கட்டில் பங்கேற்கும் காளைகளுக் கும் இந்த ஆண்டு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தஞ்சையில் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, மண் குத்துதல், மாடு பாய்ச்சல் உள்ளிட்ட பயிற்சி கள் அளிக்கப்பட்டன. சில பகுதி களில் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க மின்விசிறியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காளைகள் ஆரோக்கியமாக இருக்க வாரத்துக்கு ஒருமுறை பிரண்டை, மிளகாய், சின்ன வெங் காயம், கடலை மிட்டாய் உள் ளிட்டவை வழங்கப்பட்டதாகவும், அவற்றுக்கு உணவாக பருத்தி கொட்டை, தவிடு, புண்ணாக்கு ஆகியவை வழங்கப்பட்ட தாகவும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!