பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை

பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை

1 mins read

புதுவை: எதிர்வரும் மார்ச் முதல் தேதியில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க இருப்பதாக புதுவை அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் நாராயணசாமி பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், குவளைகளுக்குத் தடை விதிப்பது என அமைச்சரவையில் முடிவு எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் தடை குறித்து வியாபாரிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.