நஞ்சு அருந்திய காதலர்களுக்கு மருத்துவமனையில் திருமணம்

நஞ்சு அருந்திய காதலர்களுக்கு மருத்துவமனையில் திருமணம்

1 mins read

ஹைதராபாத்: குடும்பத்தினர் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் நிறைவேறாது என்று நினைத்த ரேஷ்மா என்ற பெண் தனது காதலை நிரூபிக்க நஞ்சு குடித்தார். அதன்பின்னர் சிசிச்சை அளிக்கப்பட்ட விகாராபாத் அரசு மருத்துவமனைக்கு வந்த ரேஷ்மாவின் காதலன் முகமது நவாஸ், ரேஷ்மா குடித்த மருந்து பாட்டிலைப் பார்த்துவிட்டுத் தருவதாகக் கூறி மருத்துவர் களிடம் வாங்கி மீதமிருந்த மருந்தைக் குடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், ஹைதராபாத் அருகே உள்ள விகாராபாத் நகரைச் சேர்ந்த முகமது நவாஸ், ரேஷ்மாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். காதலர்களின் உடல்நிலை சீரான நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையிலேயே மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் சாட்சியாக இஸ்லாமிய முறைப்படி பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.