கும்பமேளாவுக்காக கோடிக்கணக்கில் திரளும் மக்கள்

கும்பமேளாவுக்காக கோடிக்கணக்கில் திரளும் மக்கள்

1 mins read
87bce79c-1dfd-4296-9610-955a5144d605
-

பிரயாக்ராஜ்: இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள பிராயாக்ராஜ் நகரில் கும்பமேளா திருவிழாவுக்காக கோடிக்கணக்கானோர் திரண்டுள்ளனர். அடுத்த 48 நாட்களுக்கு 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவிழாவின்போது கங்கா, யமுனா நதிகளில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் அங்கு செல்வது வழக்கம்.

கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக கிட்டத்தட்ட 30,000 போலிசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.