புதுடெல்லி: ஒடிசாவுக்குப் பிரதமர் மோடி வர உள்ள நிலையில், பாலங்கிர் நகரில் ஹெலிபேட் அமைப்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் செயல்பாடு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு கிறார். ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியைப் பாஜக விமர்சித்து வந்ததால் முதல்வர் நவீன் பட்நாயக் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5ஆம் தேதி பிரதமர் மோடி ஒடிசா வந்தபோது நவீன்பட்நாயக் பங்கேற்கவில்லை.
ஒடிசா: மோடியின் வருகைக்காக ஏராளமான மரங்கள் அழிப்பு
1 mins read

