பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘பிலிப் கோட்லெர்’ விருது

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தன்­ன­லமற்ற சேவையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிலிப் கோட்லெர் அனைத்துலக விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் புகழ்­பெற்ற பேராசிரியரான பிலிப் கோட்லெர் நினைவாக ஆண்டு­தோறும் வர்த்­தகத்துறை­யில் விருது வழங்கப்படுகிறது. நாட்­டுக்­கும் மக்களுக்­கும் சிறப்பான சேவையாற்றும் தலை­வர்­களுக்கு இந்த ஆண்டு முதல் விருது வழங்கத் தீர்மானிக்­கப்­பட்டு, இந்தியாவின் வளர்ச்சிக்­குத் தன்­னலமற்ற சேவையாற்று­வதற்காக இவ்விருதுக்குப் பிரத­மர் மோடி தேர்வு செய்யப்பட்டார்.

அதன்படி, அமெரிக்கவின் இல்­லி­னாய்ஸ் பல்கலைக்கழகத்­தின் இந்த விருது டெல்லி­யில் பிரதமர் மோடிக்கு நேற்று வழங் கப்பட்டது. விருதையும் பாராட்டுப் பட்டயத்­தையும் மோடி பெற்றுக் கொண்டார். "சிறப்பான தலைமைத்துவத்து­டன், நாட்டுக்கு மோடி ஆற்றி வரும் தன்னல­மற்ற சேவை­யால் இந்தியப் பொருளியல் வளர்ச்சி அடைந்­துள்­ளது," என்று விருது­டன் அளிக்­கப்பட்ட பாராட்டுப் பட்ட­­யத்­­தில் குறிப்பிடப்பட்­டுள்­ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "உலகப் புகழ்பெற்ற இந்த விருதைப் பெற்றுள்ள நமது பிரதமருக்கு வாழ்த்துக்கள்," என்று பதி­விட்­­டுள்­ளார். மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்­துத் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!