சபரிமலை சென்று திரும்பிய பெண் மாமியாரால் தாக்கப்பட்டார்

சபரிமலைக்குச் சென்றுவந்த பெண்களில் ஒருவர் அவரது மாமியாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மருத்து வமனையில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஐம்பது வயதுக்கு உட்பட்ட பெண்களும் சபரிமலை சென்று அய்யப்பனைத் தரிசிக்கலாம் எனக் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத் தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து இம்மாதம் 2ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த பிந்து அம்மினி, 40, கனக துர்கா, 39 என் னும் இரண்டு பெண்களும் போலிஸ் பாது காப்புடன் சபரிமலை சென்று தரி சித்து வரலாறு படைத்தனர். ஆனால் அவர்களின் அந்தச் செயலுக்கு வலதுசாரி அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அதனால் அவர்கள் உடனடியாக தங்களது வீடுகளுக்குத் திரும்பாமல் கொச்சிக்கு வெளியே ரகசிய இடத்தில் தங்கி இருந்தனர். இந்நிலையில், கனக துர்கா நேற்றுக் காலை தமது வீட்டுக்குச் சென்றபோது அங்கிருந்த அவரது மாமியார் அவரை உள்ளே அனுமதிக்க வில்லை. அப் போது அவ்விருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எதிர்ப்பை மீறி வீட்டுக்குள் நுழைந்தபோது கனக துர்காவை அவரது மாமியார் மரக்கட்டை யால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தலையில் அடிபட்டதால் அவர் உடனடியாக மலப்புரம் மாவட்டம் பெருந்தில்மன்னா என்னுமிடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

மரக்கட்டையால் தாக்கியதில் காயமடைந்த கனக துர்கா. படம்: ராய்ட்டர்ஸ்