பி.சுசீலாவுக்கு கேரளாவில் விருது

சபரிமலை: திரைப்பட பின்னணிப் பாடகி 83 வயது பி.சுசீலாவுக்கு (படம்) ‘ஹரிவராசனம்’ விருது வழங்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் பற்றி பாடுவோருக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ‘ஹரிவராசனம்’ விருது வழங்கப்படுகிறது. ஜேசுதாஸ், விஜயன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஸ்ரீகுமார், கங்கை அமரன், சித்ரா உள்ளிட்டோர் ஏற்கெனவே இந்த விருதைப் பெற்றுள்ளனர். சன்னிதானத்தில் நடந்த விழாவில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் சுரேந்திரன் விருதை வழங்கினார்.