வங்கி அதிகாரிகள்: நாணயங்கள் போலியானவை, நம்பவேண்டாம்

வங்கி அதிகாரிகள்: நாணயங்கள் போலியானவை, நம்பவேண்டாம்

1 mins read

புதுடெல்லி: புதிதாக 20, 100, 125, 200 ரூபாய் மற்றும் 1 லட்சம் ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளதாகக் கூறி அதன் புகைப்படங்களை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்ற நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. இவை போலியானவை. யாரும் நம்ப வேண்டாம் என வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.