சபரி மலை கோயிலுக்குள் நுழைய மேலும் இரண்டு பெண்கள் முயற்சி

சபரி மலை கோயிலுக்குள் 50 வயதுக்கும் குறைவான மேலும் இரண்டு பெண்கள் நுழைய முயன்றதை அடுத்து அந்தப் பகுதியில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்துள்ளன.

கோயிலுக்குள் சென்ற ஒன்பது பேர் கொண்ட குழுவில் இந்த இரண்டு பெண்கள் பதுங்கியிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் பம்பா அடிவாரத்தைக் கடந்து சென்ற பிறகு தடுக்கப்பட்டனர். இவ்விரு பெண்-களில் ஒருவர், யாத்திரைக்கான தனது விரதத்தை ஆரம்பித்தது முதல் கொலை மிரட்டல்களுக்கு உள்ளானதாகத் தெரிவித்தார். ஆயினும் தனது செயலை சபரிமலை அய்யப்பன் எதிர்க்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

இவ்வாறு கோவிலுக்குள் நுழைந்த கனகதுர்க்கா, தனது மாமியாரால் திங்கட்கிழமை தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்தாண்டு செம்டம்பரில் அனைத்து வயது பெண்களும் இந்தக் கோயிலுக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாகத் தீர்ப்பளித்தது முதல் அங்கு பதற்றநிலை அதிகரித்துள்ளது.