சத்ரபதி சிவாஜி சிலை அமைக்க உச்ச நீதிமன்றம் தடை

சத்ரபதி சிவாஜி சிலை அமைக்க உச்ச நீதிமன்றம் தடை

1 mins read

மும்பை: மும்பையின் அரபிக்கடல் ஓரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை அமைப்பதற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மகாராஷ்டிர மாநிலம், மும்பை கடற்கரையில் சத்ரபதி சிவாஜியின் 210 மீட்டர் உயர சிலையை அமைப்பதற்கு அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து சிலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் உரிய சுற்றுச்சூழல் அனுமதி இன்றி சிலை அமைக்கப்படுவதாக பாதுகாப்பு திட்ட அறக்கட்டளை என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதன் எதிரொலியாக சிலை அமைக்கும் பணிகளை மாநிலப் பொதுப்பணித்துறை நிறுத்தியுள்ளது.