மும்பை: டெல்லி, மும்பையில் வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் தலா மூன்று விமான நிலையங்கள் இயங்கும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற உலகளாவிய விமானப் போக்குவரத்துத் தொடர்பான கருத்தரங்கில் இந்திய போக்குவரத்துத்துறை அமைச்சு சார்பில் 'விஷன் 2040' என்ற பெயரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் பயணிகளால் நிரம்பி வழியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மும்பையில் 2040ஆம் ஆண்டில் மூன்று விமான நிலையங்கள்
1 mins read

