இளைஞர் சத்தியரூப் உச்சியை எட்டி சாதனை

இளைஞர் சத்தியரூப் உச்சியை எட்டி சாதனை

1 mins read
9d0e41d4-ddc8-4cb9-8964-8c96a5e6c4e1
திரு சத்தியரூப் சென்ற ஆண்டில் வடஅமெரிக்காவில் இருக்கும் பிகோ டி ஒரிசபா மலை உச்சியைத் தொட்டு அங்கு கம்பீரமாக இந்தியக் கொடியைப் பறக்கவிட்டார். படம்: டுவிட்டர்/ சத்தியரூப் சித்தாந்தா -
Google News Preferred Icon

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஹரிதேவ்பூர் என்ற நகரைச் சேர்ந்த 35 வயது சத்தியரூப் சித்தாந்தா என்ற இளைஞர், மலை ஏறுவதில் உலக சாதனை படைத்து இருக்கிறார். இவர் சிறுவயதில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏழு மலை உச்சிகளையும் தொட்டு, எரிமலையின் உச்சிகளை யும் எட்டி ஆக இளைய வயதில் இந்தச் சாதனையைப் படைத்து இருக்கும் அவர் உலகக் கதா- நாயகனாக மிளிர்கிறார். அண்டார்டிகாவில் இருக்கும் மவுண்ட் சிட்லே என்ற மலையின் உச்சியை புதன்கிழமை தொட்டு அவர் இந்தச் சாதனையை ஏற்படுத்தியுள்ளார். திரு சத்தியரூப், இந்தச் சாதனைகளை 262 நாட்களில் படைத்துள்ளார். இதே சாதனையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனில் புல் என்பவர், தனது 36வது வயதில் 157 நாட்களில் செய்து முடித்தார். ஏழு மலை உச்சிகளையும் எரி மலை உச்சிகளையும் எட்டி இருக் கும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் சத்தியரூப் பெற்று இருக்கிறார். சத்தியரூப் தகவல் தொழில் நுட்பத்துறை ஊழியர். இப்போது இவர் பெங்களூரில் இருந்து பணியாற்றுகிறார்.