பெரிய கூட்டணி; பிரம்மாண்ட வெற்றி: பாஜக அதிரடி வியூகம்

பெரிய கூட்டணி; பிரம்மாண்ட வெற்றி: பாஜக அதிரடி வியூகம்

1 mins read

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தலைமை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை பாஜக கூட்டணியில், அதிமுக, தேமுதிக, பாமக உள் ளிட்ட கட்சிகள் இடம்பெற வாய்ப் புள்ளதாக அரசியல் கவனிப் பாளர்கள் கருதுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் எதிர் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத் தில் நடக்க உள்ளது. இதையடுத்து கூட்டணி வியூகங்களை அமைப்ப தில் தேசிய மற்றும் மாநிலக் கட்சி கள் முனைப்பாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவுடன் மாநிலத்தில் வலுவாக உள்ள அதிமுக கூட்டணி அமைக் கும் என கடந்த பல மாதங்களாகவே பல்வேறு தரப்பிலும் ஆருடம் தெரி விக்கப்பட்டு வருகிறது. இருதரப் புக்கும் இடையே திரை மறைவில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த் தையை துவங்குவோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன் னீர்செல்வம் தெரிவித்திருந்தார். மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனப் பதில் அளித்தார். முதல்வர் பழனிசாமியும் தமிழகத்துக்கு நல்லது செய்யும் கட்சிகளுடன் மட்டுமே அதிமுக கூட்டணி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடப்பு அதிமுக தலைமை பாஜகவுடனான கூட்ட ணிக்கு ஆதரவாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படு கிறது. அதே சமயம் அதிமுகவில் ஒருதரப்பினர் இக்கூட்டணிக்கு எதிராக உள்ளனர். 2