மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் புதிய மத்திய பல்கலைக்கழகம்

மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் புதிய மத்திய பல்கலைக்கழகம்

1 mins read

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் 13 புதிய பல்கலைக்கழகங்களைத் துவங்க மத்திய அமைச்சரவை ரூ.3,639 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் புதிய மத்திய பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட உள்ளன. அடுத்து வரும் 36 மாதங்களில் இப்பல்கலைக்கழகங்கள் கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.