தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை

1 mins read
e9dc57d3-3788-4b4c-9e84-c495766a0d4e
-

புதுடெல்லி: பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. மாலை நாளிதழ் ஆசிரியரான சத்ரபதி தனது பத்திரிகையில் 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத் காரத்தில் ஈடுபடுவதாக செய்தி வெளியிட்டார். இதையடுத்து 2002ஆம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ராம் ரஹீம் உட்பட மூவருக்கு இந்தக் கொலையில் தொடர்புள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.