ஷில்லாங்: மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 தொழி லாளர்களை மீட்கும் பணியின் முதல் கட்டமாக ஒரு தொழி லாளியின் உடல் மட்டும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சடலத்தை நிலப்பரப்புக்குக் கொண்டு வரும் பணிகள் தீவிர மாக்கப்பட்டுள்ளன. மேகாலயா மாநிலத்தில் கிழக்கு ஜாய்ன்டியா மலைத்தொடரில் பாயும் லைட்டின் ஆற்றுக்கு அருகே உள்ள சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி 15 பேர் சிக்கிக் கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்துக்குள் வெள்ள நீர் புகுந்ததால் சுரங்கத்திலிருந்து தொழிலாளர்களால் வெளியே வர முடியவில்லை. இந்நிலையில் 32 நாட்களுக்குப் பிறகு நேற்று மேகாலயா சுரங்கத் தில் சிக்கியவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள் சடலத்தைக் கண்டெடுத்தனர்.
மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 15 பேர்; சடலம் கண்டுபிடிப்பு
1 mins read
சுரங்கத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் சுரங்கத்தின் வாயிலில் சிக்கியிருந்த சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர். கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

