கர்நாடகாவில் தாமரையை மலரச் செய்யும் முயற்சி தோல்வி

கர்நாடகாவில் தாமரையை மலரச் செய்யும் முயற்சி தோல்வி

2 mins read
d4fc8501-8187-40a9-a6b3-a3d91daadc6e
-

பெங்களூர்: கர்நாடகாவில் குமார சாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் 'ஆப ரேஷன் தாமரை' மீண்டும் தோல்வி அடைந்துள்ள நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர். பாஜக தரப்பினர், "கர்நாடக முதல்வர் குமாரசாமிதான் எங்கள் உறுப்பினர்களை தன் வசம் இழுக்கப் பார்க்கிறார்" என்று கூறியுள்ளனர். ஆனால் காங்கிரஸ் தரப் பினரோ, "பாஜகதான் ஆட்சி அரி யணையில் ஏற சூழ்ச்சி செய்து வருகிறது," என்று குற்றம் சாட்டி யுள்ளது. "பாஜக பின்வாசல் வழியாக ஆட்சியமைப்பதற்காக 'ஆபரேஷன் லோட்டஸை' அவர்கள் நடைமுறப் படுத்த உள்ளனர்," என்றும் காங் கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2008ல் காங்கிரஸ் தலை மையில் ஆட்சி அமைந்தபோது, அந்த ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தரப்பு எடுத்த நடவடிக்கையை 'ஆபரேஷன் லோட்டஸ்' என அழைக்கப்பட்டது.

தற்போது அதைப்போல ஒரு திட்டத்தை பாஜக செயல்படுத்த முயற்சி செய்து வருவதாகக் கூறப் படுகிறது. இதற்கிடையே தலை மறைவாக இருந்த இரண்டு காங் கிரஸ் எம்எல்ஏக்கள் திரும்பி வந் துள்ளனர். இது பற்றி விளக்கம் அளித்த முதல்வர் குமாரசாமி, "தற்போது தலைமறைவாக இருக் கிறார்கள் என்று சொல்லப்படும் அனைத்துக் காங்கிரஸ் எம்எல்ஏக் களும் எங்களுடன் தொடர்பில்தான் உள் ளனர்," என்றார் "என்னிடம் தெரிவித்து விட்டுத்தான் அவர்கள் மும்பை சென்றனர்," என்றார். "என்னுடைய தலைமையிலான அரசாங்கத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை," என்றும் அவர் கூறினார். கர்நாடகாவில் மொத்தம் 224 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் வசம் 118 பேர் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி யினரிடம் 104 பேர் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 113 பேர் போதும். ஆனால் காங்கிரஸ்-மதச்சார் பற்ற கூட்டணிக்கு 118 பேர் இருப்பதால் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. இதற்கிடையே கர்நாடகாவின் இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மீட்டுக்கொண்டனர். பாரதிய ஜனதா கட்சியை ஆதரிப்பதாகவும் இரு சுயேச்சை எம்எல்ஏக்களும் அறிவித்துள்ளனர்.