சபரி மலையில் 100 பெண்கள் தரிசனம்

சபரி மலையில் 100 பெண்கள் தரிசனம்

1 mins read

திருவனந்தபுரம்: சபரிமலையில் 100 இளம் பெண்கள்வரை தரிசனம் செய்துள்ளனர் என்று கேரள தேவசம் போர்டின் அமைச்சர் கட்கம்பள்ளி சுரேந்தரன் தெரிவித்தார். இதற் கிடையே சபரிமலையில் ஐயப் பனைத் தரிசித்த இரண்டு பெண்கள் போலிஸ் பாதுகாப்பு கேட்டுள்ளனர். ஐம்பது வயதுக்கு உட்பட்ட பிந்துவும் கனகதுர்காவும் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் அச்சம் தெரிவித் துள்ளனர். இதே விவகாரம் தொடர்பில் கனகதுர்க்காவை ஏற்கெனவே அவரது மாமியார் தாக்கியதாகக் கூறப்படுகிறது.