அமெரிக்காவில் மனைவி, நாக்பூரில் கணவர்; 'வாட்ஸ்அப்' விவாகரத்து

அமெரிக்காவில் மனைவி, நாக்பூரில் கணவர்; 'வாட்ஸ்அப்' விவாகரத்து

2 mins read

புதுடெல்லி: அமெரிக்காவில் உள்ள மனைவியின் ஒப்புதலை 'வாட்ஸ்அப்' மூலம் பதிவு செய்த நாக்பூரின் குடும்ப நீதிமன்றம் ஒன்று விவாகரத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. மனைவி, தற்போது அமெரிக் காவில் உள்ள மிச்சிகனில் படித்து வருகிறார். அவருக்கு வயது 35. அவரது கல்லூரி நீண்ட விடுமுறைக்கு அனுமதி வழங்காததால் வழக்கு விசாரணையில் பங்கேற்க முடியவில்லை என்று அவர் கூறியிருந்தார். நாக்பூரில் உள்ள காம்லா வட்டாரத்தின் குடியிருப்பாளரான 37 வயது கணவரும் மிச்சிகனில் பணியாற்றி வருகிறார். ஆனால் சொந்த ஊரான நாக்பூரில் கணவர் வந்தபோது மண விலக்குக்கு அனுமதி வழங்கப் பட்டது. இருவரின் சம்மதத்தைப் பெற்ற குடும்ப நீதிமன்றத்தின் நீதிபதி சுவாதி சவ்ஹான் நிபந்தனையுடன் பிரிந்துவாழ அனுமதி வழங்கினார்.

ஒரே ஒரு முறை மட்டும் மனைவிக்கு பத்து லட்ச ரூபாயை கணவர் வழங்க வேண் டும் என்பதே அந்த நிபந்தனை. இதற்கு கணவர் சம்மதம் தெரி வித்தார். 'வாட்ஸ்அப்' வீடியோ வழியாக மனைவியின் ஒப்புதலை நீதிபதி பெற்றார். இதையடுத்து இவ் வாண்டு ஜனவரி 14ஆம் தேதி இருவருக்கும் மணவிலக்கு வழங்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்டு 11ஆம் தேதி தற்போது தெலுங்கானா என்று அழைக்கப்படும் செகந்திராபாத் தில் தம்பதியர் இருவரும் திரு மணம் செய்துகொண்டனர். பொறியாளர்களான இருவரும் அமெரிக்காவில் வேலைக்கு சேர்ந்தனர். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்தனர். இதற்கிடையே 'விசா' காலாவதி யானதால் நாக்பூருக்குத் திரும் பிய மனைவி 'மாணவர் விசா'வில் மீண்டும் மிச்சிகன் திரும்பினார். அவர்களுக்கு இடையே விரிசல் அதிகரித்ததால் மணவிலக்குக்கு அவர்கள் விண்ணப்பித்தனர்.