எம்ஜிஆரின் 102ஆம் ஆண்டு பிறந்தநாளைக் குறிக்க சிறப்பு நாணயங்கள் வெளியீடு

எம்ஜிஆரின் 102ஆம் ஆண்டு பிறந்தநாளைக் குறிக்க சிறப்பு நாணயங்கள் வெளியீடு

1 mins read
a0571739-373a-4be2-8260-66592808403f
100 ரூபாய் நாணயங்களின் ஒரு பக்கத்தில் எம்ஜிஆரின் படம் பொறிக்கப்பட்டுள்ளது -

மறைந்த தமிழக முதல்வரும் பழம்பெரும் நடிகருமான, எம்ஜிஆர் என அழைக்கப்படும் எம் ஜி ராமச்சந்திரனின் 102ஆம் ஆண்டு பிறந்தநாளைக் குறிக்கும் சிறப்பு நாணயங்கள் நேற்று வெளியிடப்பட்டன.

100 ரூபாய், 5 ரூபாய் நாணயங்களான இந்த இரண்டு நாணயங்களைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று, கொண்டாட்ட விழா ஒன்றில் வெளியிட்டார். இந்த நாணயங்களைத் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மேடையில் பெற்றுக்கொண்டார்.

100 ரூபாய் நாணயங்களின் ஒரு பக்கத்தில் எம்ஜிஆரின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகக் கட்டடத்தில் தமிழக முதல்வரும் துணை முதல்வரும் அமரர் எம்ஜிஆரின் சிலைக்கு நேற்று மாலை அணிவித்தனர். இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கும் மரியாதை செய்யப்பட்டது.