கங்கா நதியில் தாண்டவமாடும் தூய்மைக்கேடு

கங்கா நதியில் தாண்டவமாடும் தூய்மைக்கேடு

1 mins read
bdaf5fb1-9114-485b-94b4-f064f68c3973
கங்கா நதி ஓரத்தில் சுத்தம் செய்பவர். (படம்: ராய்ட்டர்ஸ்) -
Google News Preferred Icon

இந்துக்கள் பலரால் புனிதமாகக் கருதப்படும் கங்கா நதி, இமய மலைத்தொடரின் மேற்குப் பகுதியிலிருந்து வங்காள விரிகுடாவிலுள்ள பல்வேறு நகரங்களைக் கடந்து செல்கிறது. பனிமலையின் உச்சியிலிருந்து ஓடும் தெளிவான நதிநீர், 2,525 கிலோமீட்டர் கடந்து கடலுக்குள் கலப்பதற்குள் சாக்கடை நீராக உருமாறுகிறது. 2020க்குள் கங்கா நதியை முழுமையாகச் சுத்தப்படுத்துவதற்காக 3 பில்லியன் டாலர் திட்டம் முன்னதாக அறிவிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் இந்த நதி 70 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை தூய்மையாகும் என்று இந்திய நீர்வள அமைச்சர் நிதின் கட்காரி கடந்த மாதம் அறிவித்தார். மார்ச் 2020ஆம் ஆண்டுக்குள் நதிநீர் நூறு விழுக்காடு சுத்தமாகும் என்று அவர் கூறினார்.