இந்தியாவில் இவ்வாண்டு பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆட்சியமைக்கப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாநிலக் கட்சிகள் உருவெடுக்கும் என மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி முழங்கியிருக்கிறார். கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும் பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது பாரதிய ஜனதா கட்சி. இந்த நிலையில், அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் அக்கட்சியே வென்று ஆட்சியைத் தக்க வைத்துவிடக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு பெரும் கூட்டணி அமைக்க முயன்று வருகின்றன. அத்தகைய கூட்டணி அமைவதை உறுதிசெய்யும் விதமாக திரிணாமூல், தெலுங்கு தேசம், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் பங் கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத் திற்கு கோல்கத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக அதிருப்தி யாளர்கள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா போன்ற தலைவர்கள் பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
அணிதிரளும் எதிர்க்கட்சிகள்
1 mins read

