சைக்கிளோட்டிகள், தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு புதிய வேகக் கட்டுப்பாடு

சைக்கிளோட்டிகள், தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு புதிய வேகக் கட்டுப்பாடு

1 mins read

சைக்கிளோட்டிகளும் தனிநபர் நட­மாட்டச் சாதனங்களைப் பயன்­படுத்துவோரும் பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து நடைபாதைகளில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்­திற்கு மேல் ஓட்ட அனுமதிக்கப்பட மாட்டாது. நிலப் போக்குவரத்து ஆணை­யம் நேற்று இதனைத் தெரிவித்தது. மேலும், அவர்கள் சாலையைக் கடக்கும்போது தங்களது சாதனங்­களை நிறுத்தி, வாகனங்கள் வருகின்றனவா என்பதைச் சரி­பார்க்க வேண்டும். அதே போல பாதசாரிகள் கடப்­பதற்கான வரிக்கோட்டுப் பாதை­ யை நெருங்கும்போது வாகன ஓட்டிகளும் மெதுவாகச் செல்ல வேண்டும்.

அத்துடன், சாலைகளில் சைக்­கிளை ஓட்டும் அனைத்து சைக்கி­­ ளோட்டிகளும் தலைக்கவசத்தை அணிய வேண்டும். இதற்கிடையே, இயந்திர வசதி உடைய சக்கர நாற்காலிகளுக்கும் ஸ்கூட்டர்களுக்கும் அதிகபட்ச­மாக மணிக்கு 10 கிலோமீட்டர் வேகக் கட்டுப்பாடு இருக்க வேண்டும். "நமது நடைபாதைகளையும் சாலைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க மேற்கொள்ளப்பட்டு­வரும் முயற்சிகளில் ஒரு பகுதி­ யாக இந்த விதிமுறைகள் இடம்­பெறுகின்றன," என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்­ பிட்டது. உந்து நடமாட்ட ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்­ கொண்ட பின் அரசாங்கம் இந்த விதிமுறைகளைக் கடந்த ஆண்டு செப்டம்பரில் முதன்முறையாக அறிவித்திருந்தது.