சென்னை-திருச்சி நெடுஞ்சாலை அமைக்க மத்திய அரசு திட்டம்

சென்னை-திருச்சி நெடுஞ்சாலை அமைக்க மத்திய அரசு திட்டம்

1 mins read

சென்னை: தமிழகத்தின் தலை நகரான சென்னைக்கும் சேலம் நகருக்கும் இடையில் எட்டு வழிச் சாலை அமைக்க கிளம்பி இருக் கும் எதிர்ப்புகள் ஒருபுறம் இருந் தாலும் மத்திய சாலைப் போக்கு வரத்து ஆணையம், சென்னையை யும் திருச்சியையும் விரைவுச் சாலை மூலம் இணைக்க வேறு ஒரு திட்டத்தைத் தீட்டி இருக் கிறது. இந்தச் சாலையை தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி, தூத்துக்குடி ஆகியவற்றை இணைக்கும் சாலை யுடன் இணைக்கவும் திட்டம் இருக்கிறது. நாட்டில் மொத்தம் சுமார் 6,747 கி.மீ. தொலைவுக்கு விரைவுச் சாலைகளையும் இதர வசதிகளை யும் ஏற்படுத்த இரண்டாம் கட்ட திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. அந்தத் திட்டத்தின்கீழ் பல விரைவுச் சாலைகளுக்கான விரி வான திட்ட அறிக்கைகளைத் தயாரிக்கும்படி கேட்டு அண்மை யில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலோசனையாளர் களுக்கு அழைப்பு விடுத்தது. அந்தத் திட்டத்தில் தமிழகத் தில் இடம்பெறும் நெடுஞ்சாலைத் திட்டங்களும் அடங்கும். சென்னை - திருச்சி விரைவுச் சாலை 310 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்படும். அது பல தடங் களைக் கொண்டதாக அமைந்து இருக்கும். பிள்ளையார்பட்டி- தூத்துக்குடி சாலை 160 கி.மீ. தொலைவுக்கு இருக்கும். தஞ்சாவூர் - பிள்ளையார்பட்டி 82 கி.மீ. நான்கு தட சாலைக்காக நிலப் பற்றுமானப் பணிகள் ஏற்கெனவே தொடங்கி இருக்கின்றன என்று அறிவிக்கப் பட்டு உள்ளது.