தேர்தல் தேதி மார்ச் முதல் வாரம் தேர்தல் தேதி அறிவிப்பு

தேர்தல் தேதி மார்ச் முதல் வாரம் தேர்தல் தேதி அறிவிப்பு

1 mins read

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் முதல் வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. மார்ச் 10ஆம் தேதிக்கு முன்னதாக தேர்தல் தேதி அறி விக்கப்பட இருக்கிறது. அப்படி அறிவிக்கப்பட்டால் ஏப்ரல் மாதம் 10ம் தேதிவாக்கில் முதல்கட்டத் தேர்தல் நடைபெறும். தேர்தல் தேதி மார்ச் 10ஆம் தேதிக்கு முன் அறிவிக்கப்படும் என்பதால் அதற்குள் அரசியல் கட்சிகளும் கூட்டணி பற்றி பேசி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது. இதனிடையே, சமூக வலைத் தளங்களில் வெளியான நாடாளு மன்றத் தேர்தல் தேதிகள் வதந்தி என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.