காங்கிரஸ் கட்சியின் வருமானம் தேய்ந்தது

காங்கிரஸ் கட்சியின் வருமானம் தேய்ந்தது

1 mins read

புதுடெல்லி: அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை தேர் தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய் வது வழக்கம். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் வரவு=செலவு கணக்கைத் தணிக்கை செய்யும். அதன்படி 2017=18ஆம் ஆண்டுக்கான வரு மான விவரத்தை தேர்தல் ஆணை யத்திடம் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்து உள்ளது. அதில் 2017=18ஆம் ஆண்டில் ரூ.199 கோடி வருமானம் கிடைத் திருப்பதாகக் கூறி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 11 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் வருமானத்தில் சரிவு ஏற்பட்டுள் ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அக்கட்சிக்கு 12 விழுக்காடு வருமானம் குறைந்து இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 2001 முதல் 2013 ஆண்டு வரை காங்கிரஸ் கட்சிக்கு வரு மானம் பெருகி நாட்டிலேயே அதிக வருமானம் கொண்ட கட்சியாக முதலிடத்தில் காங்கிரஸ் இருந்தது.