தமிழகத்தில் ராகுல் போட்டி

தமிழகத்தில் ராகுல் போட்டி

1 mins read

புதுடெல்லி: மே மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர். தேர்தல் பிரசாரம், கூட்டணி பேச்சுவார்த்தை என அரசியல் கட்சிகள் தீவிரமாக இயங்கி வரு கின்றன. பிரதமர் மோடி கேரள மாநிலம் கொல்லத்தில் தேர்தல் பிர சாரத்தைத் தொடங்கி வைத் துள்ளார். இந்த முறை அவர் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவாரா அல்லது தொகுதி மாறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு அதிருப்தி நிலவுவதே அதற்குக் காரணம். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சோனியா உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரலி தொகுதி யிலும் ராகுல் காந்தி (படம்) அமேதி தொகுதியிலும் வழக்கம் போல போட்டியிட உள்ளனர். ஆனால் இம்முறை ராகுல் காந்தி அமேதி தொகுதி மட்டுமல் லாமல் தமிழகத்தில் சிவகங்கை அல்லது கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட உள்ளதாகத் தகவல் கள் கசிந்துள்ளன. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்து வருவதாகவும் இந்த இரண்டில் எந்தத் தொகுதி என்பது விரைவில் முடிவு செய் யப்படும் என்றும் இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன.