சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் கட்டடம் சிதறியது: நடந்து சென்றவர் பலி

சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் கட்டடம் சிதறியது: நடந்து சென்றவர் பலி

1 mins read

ஹைதராபாத்: தெலுங்கானா மாநி லத்தில் சமையல் எரிவாயு உருளை (சிலிண்டர்) வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மாண்டார்; நால் வர் காயமுற்றனர். மெய்ட்சல் மாவட்டம் கப்ரா தாலுகா அலுவலகம் அருகே மோகன்லால் சவுத்ரி என்பவருக்கு சொந்தமாக அடுக்குமாடி வீடு உள்ளது. இவரது வீட்டின் 2வது தளத்தில் உள்ள சமையல் அறை யில் வைக்கப்பட்டிருந்த உருளை நேற்றுக் காலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் வீட்டின் 2வது தளம் முழுவதுமாக சேதம் அடைந்து சுவர்கள் நொறுங்கி விழுந்தன. அருகில் உள்ள 6 வீடுகளும் சேத மடைந்தன. இதையடுத்து சுவர் நொறுங்கி மேலே விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த ரவி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீடுகளுக்குள் இருந்த நால்வர் காயமுற்றனர். அவர்கள் உடனடி யாக அருகிலிருந்த மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் நீண்ட போராட்டத் துக்குப் பின்னர் தீயை கட்டுக் குள் கொண்டு வந்தனர். திடீ ரென்று எரிவாயு உருளை வெடித் தது எவ்வாறு என போலிசார் விசாரித்து வருகின்றனர்.