ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. லடாக் பிராந்தியத்தில் கடல் மட்டத்திலிருந்து 17,582 அடி உயரத்தில் கார்டங் லா பகுதி அமைந்துள்ளது. இது சீனாவின் எல்லைப் பகுதியாகும். இங்குள்ள மலைப்பாதையில் நேற்றுக் காலை 7 மணி யளவில் டிரக் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீர் என பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவு ஏற்பட்ட குறிப்பிட்ட இடத்தை அவ்வழியே கடந்தபோது வாகனம் மாயமானது. அதில் இருந்த 10 பேர் பனிச்சரிவுக்குள் சிக்கி இருப் பதாகத் தெரியவந்தது. பனிச்சரிவுகள் தொடர்ந்ததால் அந்தப் பகுதிக்குச் செல்ல முடியாதபடி கடும் சவாலாக இருந்தது. பனிச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் போலிசார் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்க ளுக்கு ராணுவத்தினரும் உதவினர். மீட்புப் பணிகளின் போது மூன்று சடலங்கள் கைப்பற்றப்பட்டன. எஞ்சிய ஏழு பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பனிச்சரிவில் மூவர் மரணம்
1 mins read

