தமிழகத்திலும் கேரளத்திலும் உள்ள ஆர்எஸ்எஸ் இயக்கத்தி னரைக் குறிவைத்து பயங்கர வாதத் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக புதுடெல்லி போலிசார் மூன்று ஆடவர்களைக் கைது செய்துள்ளனர். இம்மூவரும் சமூக, சமய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. டெல்லி சிறப்பு போலிசாரிடம் சிக்கிய மூவரில் ஒருவர் டெல்லி வாசி, மற்றவர் கேரளாவைச் சேர்ந்தவர், மூன்றாவமர் ஆப் கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்று செய்தியாளர்களிடம் போலிசார் தெரிவித்தனர்.
தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்துமாறு பாகிஸ்தான் உதவிபெற்ற ஐஎஸ்ஐ கும்பல் கே ட் டு க் கொ ண் ட தை த் தொடர்ந்து சந்தேக நபர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்ட னர். இக்கும்பலின் பின்னால் இருப்பது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற குண்டர்படைத் தலைவன் ரசூல் கான் என தெரிய வந் துள்ளதாக போலிசார் கூறினர். தமிழ்நாடு, கேரள மாநிலங் களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர்களைக் குறி வைத்து அவர்கள் செயல்பட்ட தாகக் கூறப்படுகிறது.
ஆர்எஸ் எஸ் அமைப்பினரைத் தாக்கும் பொறுப்பு கேரளாவின் காசர் கோட்டைச் சேர்ந்த முத்தாசிம் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவரை கேரள போலி சார் முன்கூட்டியே கைது செய்து விட்டனர். தாக்குதலுக்கான ஆயுத உதவிகளை டெல்லியைச் சேர்ந்த ஷேக் ரியாஜுதீன் செய்து வந்த தாகக் கூறப்பட்டது. அதேநேரம் கொலைப் பட்டியலில் உள்ளவர் களைக் குறிபார்த்துச் சுடும் பொறுப்பு ஆப்கானிஸ்தானின் வாலி முகம்மது என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்ததாகத் தெரிகிறது. மூவரும் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்துவதற்கான திட் டம் வகுத்துக்கொண்டு இருந்த வேளையில் அதுபற்றிய துப்பு டெல்லி போலிசாருக்குக் கிடைத் தாகக் கூறப்பட்டது.

