சென்னை-தூத்துக்குடி இடையே புதிய எட்டு வழிச் சாலை

சென்னை-தூத்துக்குடி இடையே புதிய எட்டு வழிச் சாலை

1 mins read

புதுடெல்லி: சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடி மதிப்பில் புதிய 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தச் சாலை சென்னை - விழுப்புரம் வரை 10 வழிச்சாலையாகவும் விழுப்புரம்-தஞ்சாவூர்- திருச்சி வரை 8 வழிச்சாலையாகவும் திருச்சி- தூத்துக்குடி வரை 6 வழிச்சாலையாகவும் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய சென்னை- தூத்துக்குடி சாலைத் திட்டத்தின் மூலம் சென்னை - தூத்துக்குடி இடையே பயண தூரம் 100 கிலோ மீட்டர் வரை குறைய வாய்ப்புள்ளது.