மம்தா: பாஜகவை அகற்றுவதே நோக்கம்

மம்தா: பாஜகவை அகற்றுவதே நோக்கம்

2 mins read
0794bd97-c32d-4a21-9146-c970e790cf58
-

கோல்கத்தா: மேற்கு வங்க முதல் வர் மம்தா பானர்ஜி பாஜகவிற்கு எதிரான மூன்றாவது அணியை உருவாக்கும் நோக்கில் கோல் கத்தாவில் நேற்று மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக கடந்த ஓராண்டாக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மம்தா, சுமார் 25 கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று சரத் பவார், தேவேகவுடா, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல் வேறு கட்சிகளின் 20 தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட னர்.

பாஜக அதிருப்தி தலைவர்கள் யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா, அருண்ஷோரி, ராம்ஜெத் மலானி ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்குப் பதில் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற் றார். மாயாவதி, சந்திர சேகரராவ் இதில் கலந்துகொள்ளவில்லை. இக்கூட்டத்தில் பேசிய தலை வர்கள் மோடியையும் பாஜகவையும் சரமாரியாகச் சாடினர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, "மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

மோடி அரசு நாட்டை அழித்துவிட்டது. மோடி ஆட்சியில் நாட்டில் வேலையில்லாத் திண்டாட் டம் அதிகரித்துள்ளது. நாட்டின் தேவையைக் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. "பாஜக ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது. பாஜகவை அகற்றுவதே எங்கள் நோக்கம். தேர்தலுக்குப் பின் பிரதமர் குறித்து முடிவெடுப்போம்," எனப் பேசினார். காங்கிரசின் மல்லிகார்ஜுன கார்கே, "பாஜகவினர் தங்களது பெருவணிக நண்பர்களுக்கு உதவுகிறார்கள். "ஜனநாயகத்தையும் அரசியல மைப்பையும் காப்பாற்ற நாங்கள் ஒன்றிணைந்து உள்ளோம்," என்றார்.