மூதாட்டியைக் காலில் விழ வைத்தவர் மீது நடவடிக்கை

மூதாட்டியைக் காலில் விழ வைத்தவர் மீது நடவடிக்கை

1 mins read
3db3515e-b008-44ea-96d9-f3ce158e3bac
மூதாட்டி அதிகாரியைக் கும்பிட்டும் காலைத் தொட்டு வணங்கியும் கெஞ்சிய நிகழ்வு. படம்: இந்திய ஊடகம் -
Google News Preferred Icon

லக்னோ: உத்தரப்பிரதேச காவல் நிலையத்தில் மூதாட்டியைக் காலில் விழவைத்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். நிலையத்தில் இன்ஸ்பெக் டராகப் பணியாற்றிய தேஜ் பிரகாஷ் சிங் கால்மேல் கால் போட்டு, தலையில் கையை வைத் துக்கொண்டு அமர்ந்திருக்க, அவரிடம் 75 வயதான மூதாட்டி பிரம்மா தேவி ஓடிவந்து தொழிற் சாலையில் வேலை பார்த்த தமது பேரன் இறந்துவிட்டது குறித்து விசாரணை நடத்தும்படி கெஞ் சினார். இச்சம்பவத்தைக் காட் டும் காணொளி சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. இடமாற்றத்துடன் இன்ஸ்பெக் டரின் செயல் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.