கோல்கத்தா: நேற்று தென் கோல்கத்தாவின் கரியாஹட் பகுதியில் ஏற்பட்ட பெருந்தீச் சம் பவத்தில் பல கடைகளும் பல லட்சங்கள் மதிப்பிலான சரக்கு களும் நாசமாகின. ஒரு துணிக்கடையையும் பல குடியிருப்பு வீடுகளையும் உள்ளடக் கிய ஐந்து மாடிக் கட்டடத்தில் விடியற்காலை 1 மணிக்கு தீ மூண்டது. இதில் இதுவரை எந்த உயிரிழப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததை அடுத்து குறைந்தது 19 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் நெருப்பை அணைக்கும் பணியில் மும்முரமாக இறங்கியதாகத் தெரிவிக்கப்பட் டது. கட்டடத்தில் குடியிருந்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் சிலர் மூச்சுத் திணறல் காரணத்தால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதி காரிகள் கூறினர். மின்தூக்கி இல்லாத அக்கட் டடத்திலிருந்து மக்கள் மாடிப்படி வழியாக இறங்கித் தீயிலிருந்து தப்ப வேண்டியதாக இருந்தது. தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் கட்டடத்தை இணைக் கும் நடைபாதை ஒன்றில் உள்ள கடையில் நெருப்பு பற்றியதாக நம்பப்படுகிறது. மொத்தம் 30 தீயணைப்பு வாகனங்களுடன் கிட்டத்தட்ட 12 மணிநேரத்திற்குப் பிறகு நெருப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் ஆங்காங்கே இன்னமும் எரிந்த தீயை முற்றிலுமாக அணைக்க அதிகாரிகள் சிரமப் பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவ்வட்டாரத்தில் உள்ள போக்குவரத்து தற்காலிக மாக கட்டுப்படுத்தப்பட்டு வரு கிறது. இதன் தொடர்பில் சம்பவ இடத்திற்கு மாநில தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜிட் போஸ் வருகை தந்திருந்தார். அத்துடன் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக தடயவியல் நிபுணர்களும் கோல்கத்தா போலிஸ் பேரிடர் நிர்வாகக் குழுவின் மூத்த அதி காரிகளும் சம்பவ இடத்திலிருந்து தடயங்களைச் சேகரித்தனர்.
கோல்கத்தாவில் பெரும் தீ; பல கடைகள் நாசம்
2 mins read
கோல்கத்தாவில் நேற்று காலை நடந்த தீச்சம்பவத்தில் கட்டடமும் அதைச் சுற்றியிருந்த கடைகளும் சேதமடைந்தன. படம்: இபிஏ -

