தலைமை நீதிபதி திடீர் விலகல்

தலைமை நீதிபதி திடீர் விலகல்

2 mins read

புதுடெல்லி: மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மறுப்புத் தெரிவித்து, அவ்விசா ரணையில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் (படம்) நேற்று திடீரென அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான உயர்மட்டக் குழு சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவை பதவிநீக்கம் செய்தது. அதையடுத்து, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து, ஒரு தன்னார் வத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். புதிய சட் டத்தின்படி சிபிஐக்கு இடைக்கால இயக்குநரை நியமிக்க முடியாது என்பதும் முழுப் பொறுப்புடன் கூடிய இயக்குநரையே நியமிக்க வேண்டும் என்பதும் அவரது வாதம். அதனால், இடைக்கால இயக்குநர் பதவியில் இருந்து நாகேஸ்வர ராவை நீக்க வேண்டும் என அவர் மனுத் தாக்கல் செய் திருந்தார். அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்குவதற்கு முன்பாக அதிலிருந்து விலகு வதாக அறிவித்தார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய். சிபிஐக்கு புதிய இயக்குநரைத் தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழு இன்று கூடவிருக்கிறது. அந்தக் குழுவில் தாமும் இடம் பெற்று இருப்பதால் நாகேஸ்வர ராவ் நியமனம் தொடர்பான வழக்கைத் தம்மால் விசாரிக்க முடியாது என்று திரு கோகோய் விளக்கமளித்துள்ளார். இதையடுத்து, வழக்கு விசார ணையை நாளை மறுநாள் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்த அவர், வேறு நீதிபதி தலைமையிலான அமர்வு அதனை விசாரிக்கும் என்றும் அறிவித்தார்.