ஆன்டிகுவா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பெற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்குத் தப்பியோடிய வைர வியாபாரி மெகுல் சோக்சி, இந்தியக் குடியுரிமையைத் துறந்துவிட்டார். ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்த அவர் கயானாவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் தமது கடப்பிதழை ஒப்படைத்துள்ளார். இத்தகவலை இந்தியாவும் உறுதிசெய்துள்ளது. இந்தியாவிற்கு நாடு கடத்தப் படுவதில் இருந்து தப்பிக்கவே அவர் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அவரை நாடு கடத்துவது தொடர்பில் இந்தியா தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 22ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. சோக்சி 2017ஆம் ஆண்டி லேயே ஆன்டிகுவா குடியுரிமை பெற்றுவிட்டதாகக் கூறப்படு கிறது. சோக்சியும் அவரின் உற வினரான நீரவ் மோடியும் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கடன் மோசடி யின் முதன்மைக் குற்றவாளிகள். சிபிஐ அமைப்பும் அமலாக்கத் துறையும் அவ்விருவரையும் தேடி வருகிறது. அவர்களுக்குச் சொந் தமான ரூ.4,500 கோடி மதிப் பிலான சொத்துகள் முடக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியக் குடியுரிமையை துறந்த வைர வியாபாரி
1 mins read

