விவசாய மானியங்களுக்குப் பதில் ரொக்கம்

விவசாய மானியங்களுக்குப் பதில் ரொக்கம்

1 mins read

புதுடெல்லி: இந்தியா முழுவதும் விவசாயிகள் பிரச்சினை வெடித் துள்ள நிலையில், அவர்களின் நிதி நெருக்கடியைக் குறைக்கும் விதத்தில் மானியங்களுக்குப் பதிலாக ரொக்கமாக அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உரச் செலவுகள் உள்ளிட்ட எல்லா விவசாய மானியங்களையும் ஒருங்கிணைத்து, அதற்கு ஈடான தொகையை ரொக்கமாக விவசாயி களுக்கு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு வருவதாக 'புளூம்பர்க்' செய்தி கூறுகிறது. இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால் அரசுக்குக் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.70,000 கோடி செலவாகும் என எதிர்பார்க் கப்படுகிறது. முன்னதாக, இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் விவசாய மானியங் களுக்காக ரூ.70,100 கோடியை நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஒதுக்கியிருந்தார். இந்நிலையில், வருடாந்திர பட் ஜெட் பற்றாக்குறை இலக்கை ஏற்கெனவே தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநில சட்டமன்றத் தேர் தலில் தோற்றதையடுத்து, பொருள் சேவை வரியையும் பாஜக அரசு திருத்தியமைத்தது. இதனால் நடப்பு நிதியாண்டிற்காக இன்னும் எவ்வளவு தொகையை மத்திய அரசு செலவிடும் எனத் தெரிய வில்லை.