புதுடெல்லி: குற்றப் பின்னணி உடைய அரசியல்வாதிகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. கடும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களுக்கு தேர்தலில் 'சீட்' வழங்கக்கூடாது என அர சியல் கட்சிகளை வலியுறுத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தர விட வேண்டும் என அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தார். அத்தகையோருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் கட்சிகளின் சின்னங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இது தொடர் பாக தேர்தல் ஆணையத்தை அணுகும்படியும் அவரை அறிவுறுத் தியது. பொதுத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில் திரு உபாத்யாய் இப்படியொரு பொதுநல மனுவைத் தொடுத்தார்.
குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மறுப்பு
1 mins read

