மத்திய அரசு மிரட்டுவதாக சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

மத்திய அரசு மிரட்டுவதாக சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

1 mins read

அமராவதி: ஆந்திராவில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தப்போவதாக மத்திய அரசு மிரட்டுகிறது என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இருந்தாலும் அத்தகைய மிரட் டல்களால் எவரையும் பணிய வைக்க முடியாது என்று நாயுடு கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி எதிர் மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தலைவர் என விமர்சித்த நாயுடு, அவரால் நாடு பின்னோக் கிச் சென்றுகொண்டிருக்கிறது என்றும் சொன்னார். தெலுங்கு தேச கட்சித் தலை வர்களிடம் காணொளிக் கலந்து ரையாடல் மூலம் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியையும் பிரதமரையும் தாக்கிப் பேசினார். பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆந்திராவிற்கென எதையும் செய்யவில்லை என்றும் அவர் சாடினார். "ஆந்திராவுக்கு வாரந்தோறும் ஒரு மத்திய அமைச்சர் வருவார் என்கின்றனர். அவர்களால் மாநி லத்திற்கு என்ன நன்மை விளைந் துள்ளது? அதோடு நில்லாமல், ஆந்திராவில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்திவிடுவோம் என்றும் மிரட்டுகின்றனர். அதைக் கேட்டு யாரும் இங்கு அஞ்சி நடுங்க வில்லை," என்றார் நாயுடு. கோல்கத்தாவில் இரு நாட் களுக்குமுன் நடந்த எதிர்க்கட்சி களின் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் குறித்து கருத்துரைத்த அவர், அது சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கான அச்சாரம் என்றும் அது மக்களிடம் நம்பிக்கையை மலரச் செய்துள்ளது என்றும் சொன்னார். "அமராவதியிலும் அதுபோன்ற தொரு கூட்டம் நடத்தப்படும். 22 கட்சிகளின் தலைவர்கள் அதில் பங்குகொள்வர்," என்றும் அவர் குறிப்பிட்டார்.