பிரசாரத்தைத் தொடங்கினார் பிரகாஷ் ராஜ்

பிரசாரத்தைத் தொடங்கினார் பிரகாஷ் ராஜ்

1 mins read
34b06f71-72fb-4738-8aaf-f6e6bbf50884
-

பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்து, மக்களிடம் குறை கேட்கும் பணியை அவர் தொடங்கிவிட்டார். அடுத்த பத்து நாட்களுக்கு பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் பெண் ஓட்டுநர்களைக் கொண்ட ஆட்டோ ரிக்ஷாக்கள் வலம் வரும். பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபின் அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க உள்ளதாகக் கூறுகிறார் பிரகாஷ் ராஜ். படம்: இந்திய ஊடகம்