கர்நாடக மாநிலம்: படகு கவிழ்ந்து எண்மர் மரணம்

கர்நாடக மாநிலம்: படகு கவிழ்ந்து எண்மர் மரணம்

1 mins read

கார்வார்: கர்நாடக மாநிலம் கார்வாரை ஒட்டிய கடல் பகுதியில் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததில் எட்டுப் பேர் உயிரிழந்தனர். மொத்தம் 22 பேர் அப்படகில் இருந்தனர் என்றும் சுற்றிப் பார்ப்பதற்காக கடலுக்குள் அவர்கள் சென்று இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. ஒன்பது பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் எஞ்சியோரைத் தேடி வருவதாகவும் கூறப்பட்டது.