திருவனந்தபுரம்: கேரள அரசாங்கத்தின் 'அக்சரலட்சம்' கல்வியறிவுத் திட்டத் தேர்வில் 96 வயதான கார்த்தியாயினி அம்மாள் 98% மதிப்பெண்களைப் பெற்று வியப்பளித்தார். தள்ளாத வயதிலும் எழுத்தறிவு பெறவேண்டும் என்ற தளராத முயற்சியால் சாதித்த அவரை கற்றல் நல்லெண்ணத் தூதராக நியமித்து காமன்வெல்த் அமைப்பு கௌரவப்படுத்தியுள்ளது. முன்னதாக, கணினியை இயக்குவது பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பிய கார்த்தியாயினி அம்மாளுக்கு கேரள கல்வி அமைச்சர் சி.ரவீந்திரநாத் மடிக்கணினி ஒன்றைப் பரிசாக வழங்கினார்.
96 வயதில் 98% மதிப்பெண் பெற்ற மூதாட்டி காமன்வெல்த் தூதரானார்
1 mins read

