ராஜஸ்தான்: எட்டு மணிக்குமேல் மது விற்கத் தடை

ராஜஸ்தான்: எட்டு மணிக்குமேல் மது விற்கத் தடை

1 mins read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இரவு எட்டு மணிக்கு மேல் மது விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை மீறும் விடுதிகள் அல்லது மதுபானக் கூடங்கள் 'சீல்' வைக்கப்பட்டு, அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப் படும். அத்துடன், போலியாக அல்லது சட்டத்திற்குப் புறம்பாக அல்லது குறிப்பிட்ட விலையைவிட அதிக விலைக்கும் மது விற்கப் பட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் எச்சரித்துள்ளார்.