ஐஎஸ்ஐஎஸ்ஸுடன் தொடர்பு; ஒன்பது பேர் கைது 

மும்பை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்து இருந்ததாகக் கூறப்படும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘ஏடிஎஸ்’ எனும் மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படை கடந்த இரு தினங்களாக சந்தேக நபர்களைத் தேடி வேட்டையாடியது.
இதன் இறுதியில் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை யினர் தெரிவித்தனர். 
இதற்கு முன்னர் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த சில வாரங்களாகவே ஒன்பது பேரையும் ‘ஏடிஎஸ்’ படையினர் கண்காணித்து வந்தனர்.
பின்னர் தங்கள் சதித் திட்டத்தை செயல்படுத்த தயாரான போது அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
கவுசா, மோடி பக், அல்மாஸ் காலனி, ம்ருத் நகர்  ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர். 
ரசாயனங்கள், அமில போத்தல்கள், கூர்மையான ஆயுதங்கள், கைத்தொலைபேசி, ‘சிம்’ அட்டைகள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
 

Loading...
Load next