திருவனந்தபுரம்: கேரளாவிலிருந்து நியூசிலாந்து நோக்கிச் சென்ற படகு மாயமானதால் அந்தப் படகை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய கடலோர காவல்படையினர் இறங்கியுள் ளனர். அந்த மீன்பிடி படகில் 230 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 11ஆம் தேதி கேரளாவின் முன்னம்பம் துறை முகத்திலிருந்து ஐம்பது பேரின் உடைமைகளை திருச்சூர் மாவட்ட கேரள காவல்துறையினர் கைப் பற்றினர். இதனால் மீன்பிடி படகு மூலம் ஐம்பது பேர் நியூசிலாந்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்தது. இதன் பின்னர் அடுத்தடுத்த நாட்களில் கொச்சி அருகே உள்ள முன்னம்பம் துறைமுகத்தில் கண் டெடுக்கப்பட்ட அடையாள அட்டைகள், துணிகள், ஆவணங்கள் மூலம் சுமார் 230 பேர் சென்றிருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டது. "முன்னம்பம் துறைமுகத்தில் கைவிடப்பட்ட பயணப் பைகளில் உடைகள், அடையாள அட்டைகள், காய்ந்த உணவுகள் உள்ளிட்ட கடற்பயணத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருந்தன," என்று கேரளாவில் உள்ள கூடுதல் போலிஸ் சூப்ரின் டெண்டண்ட் எம்ஜே சோஜன் தெரிவித்தார். மீன்பிடி படகில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது.
நியூசிலாந்துக்கு மீன்பிடி படகில் சென்ற 230 பேர் காணவில்லை
1 mins read

